காதல் என்பது

காதல் என்பது யாதென
காதலியிடம் கேட்டேன்
வெறும் இனக் கவர்ச்சியா
தூய அன்பின் வெளிப்பாடா
ஒரு புனித பந்தத்தின்
தூய ஆரம்பமா என்று....

அவள் விடை பகர்வாளோ
மௌனத்தால் மழுப்புவாளோ
மௌனமே அர்த்தமுள்ள
காதல் என்பாளோ !
-----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (26-Jan-14, 9:03 am)
Tanglish : kaadhal enbathu
பார்வை : 135

மேலே