தேசிய விருது

டாஸ்மாக் கடையின் முன்பாக இரண்டு தீவிர குடிமகன்கள்:
ஏய்யா நம்ம மாதிரி லட்சக்கணக்கல குடிக்கறவங்க இருக்கறாங்க.
ஆமா. அதுக்கு என்ன இப்ப?
நம்மலாள அரசாங்கத்துக்கு நெறய வருமானம் வருதில்ல்.
அதும் உண்மதாய்யா?
சினிமாக்காரங்களுக்கு சிறந்த நடிகர்னு தேசிய விருது ஒவ்வொரு வருசமும் தர்றாங்க இல்லையா?
ஆமாய்யா ஆமா. இப்ப என்ன சொல்ல வர்றே?
சினிமாக்காரங்க மாதிரி நம்ம குடிகாரங்கள்லயும் இந்திய அளவில ஒருத்தரத் தேர்ந்தெடுத்து சிறந்த குடி மகன்னு ஒரு தேசிய விருது தந்தா ந்ம்மல ஊக்கப்படுத்தன் மாதிரி இருக்கும்.
நீ சொல்றது நியாயந்தாய்யா? அரசாங்கம் நாம குடிச்சு சந்தோசமா இருக்க வழிகாட்டுது. ஆனா பரிசு விருது கொடுக்க மட்டும் மனசு வரல இந்த அநியாயத்த எங்க் போயி மொறயிடறது?