-கருத்தினுள் பூத்தது மல்லி மணியனைப் பாராட்டி
இது யாரையும் புண்படுத்த எழுதப்படவில்லை. பல சமயங்களில் பிறருடைய நல்ல கவிதை வரிகள் நம்முள் எழுதிப் பார்க்க ஒரு உந்துதலை ஏற்படுத்துவன என்பதற்கு ஒரு சாட்சியாகவே இது இங்கு பதியப்படுகிறது.
இனி கவிதை:
===== எதனால் நிறைவாய் சமுத்திரமே!=====
பொங்கியழும் மீனவனின் கண்ணீரோ?
புதைந்திட்ட தமிழனவன் செந்நீரோ?
தங்கிவிட்டத் தமிழன்னைப் பனி,நீரோ?
தாங்காமல் அழுமிமயப் பனி,நீரோ?
மங்கிவரும் மனிதத்தின் உடல்,நீரோ?
மடிந்தஜன நாயகத்தின் புண்ணீரோ?
எங்கிருந்தோ அழுமிறையின் மழைநீரோ?
எதனால்,நீ நிறைவாய்சொல் சமுத்திரமே!
===============
174035-என்ற எண்ணின் கீழ் ஒரு கவிதை எழுதி இந்த உந்துதலை எனக்குள் ஏற்ப்படுத்திய -மல்லி மணியன் அவர்களுக்கு எனது பாராட்டுகளை மட்டுமல்ல நன்றியினையும் சமர்ப்பிக்கின்றேன்.