கிடைக்கவில்லையடா நண்பா

பல நாட்கள் முன்னரே
பதிவு செய்து..
பல்சர் பைக்கில்
பறந்து சென்று..
குளுகுளு AC அறையில்
குனியாமல் சாப்பிடுவதில் கிடைக்கவில்லையடா நண்பா..
பள்ளி காலத்தில்..
பகல் நேர வெயிலில்..
பாட்டியிடம் நீ வாங்கி தரும்.. அந்த
மிளகாய் போட்ட மாங்காயில் கிடைத்தது..