சாத்தியம் இல்லையடி
விரதம் என்று நினைத்தாயோ ..
ஒரு வார்த்தை பேசாமல் நான் உன் முன் நிர்ப்பதாலோ...
வரம் கேட்டு வந்தேன் உன்னிடம் ...
தவம் என்ன செய்தான் என்று நினைத்தாயோ ...
தவத்தால் பூத்த மலரென்று .நான்
தனிமையில் நின்று யோசிக்கிறேன் ..
உன்னை தரையில் தததளிக்கும் என் உயிரை ஒரு நொடி பார்க்க விரும்புகின்றேன்..
கண்ணில் காதல் இல்லை என்றால் ..
என் கண்ணை பிடுங்கி எறிந்துவிடு..
உனக்குள் காதல் பிறந்துவிட்டால்.
என் கண்ணில் நுழைந்து இதயத்தில் குடி பெயர்ந்துவிடு..
கண்கள் திறந்து பாரடி ..உனக்காய் சூரியனையும் சுட்டெரித்து விடுவேன் நானடி ..
கவிதை பாடி காதலை சொல்லிவிட்டேன் ..
கண்திறந்து பாரடி அது கவிதையல்ல என் இதய துளிகள் தானடி ..
ஒரு நாள் உன்னுடன் வாழ்ந்தாலும் ..
உலகில் நான் பிறந்ததற்கு அர்த்தமுண்டு..
பனித்துளி என் மீது உன் சூரிய கண் ஒளி பட்டு
மரித்தாலும் அதில் வரலாறு காணாத காதல் காவியம் உண்டு..
இதய கண் திறந்து கொஞ்சம் பாரடி ..
இதயத்தை கிழித்துவிட்டு உயிருடன் வாழ்வது சாத்தியம் இல்லையடி ....