எப்போது

கோழைகளின்
கொழுப்பெடுத்த ஆசையின் எச்சமமாய்க்
குப்பைத்தொட்டியில் விழுந்து
ஏழையாய் வளர்கிறான் ஒருவன்..

ஆசையில் பிள்ளைகள் பெற்று
படிக்கவைத்து
அயல்நாட்டுக்கு அனுப்பிவிட்டு
அன்புக்கு ஏங்கி
அனாதையாய்
அன்பு இல்ல வளாகத்தில்
முதுமையையும் ஏமாற்றத்தையும்
முதுகில் சுமந்துகொண்டு ஒருவன்..

பத்துபிள்ளை பெற்ற
பாசமுள்ள தாயைவிட்டு
வேசம்கலைத்து பிள்ளைகள்
வெளியேறிச் சென்றதால்,
வேலியோரம்
கேலிபேசிச் செல்வோரிடம்
கைநீட்டிப் பிச்சை கேட்கும்
கனிந்துவிட்ட தாய் ஒருத்தி..

எங்கே கோளாறு,
எப்போது ஆனான் மனிதன்
மிருகமாக..

ஓ,
எப்போதும் அவன்
மிருகம் தனே-
பேசும் மிருகம்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (28-Jan-14, 7:12 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : eppothu
பார்வை : 131

மேலே