பகிர்ந்து பயனடைவோம்

பகிர்ந்து பயனடைவோம்



கன்னடம் பிறப்பதற்கு
பலநூறு ஆண்டுகட்கு முன்பே
கல்லணை கட்டி
வேளாண்மை சிறக்க
வித்திட்டான் கரிகாலன்.
அனைத்துலச் சட்டப்படி
காவிரித்தாய் தரும் நீரில்
தமிழருக்கும் சமபங்கு.
தரஏன் மறுக்கின்றீர்
கன்னடத்துச் சகோதரர்களே?

நூறாண்டைக் கடந்தும்
மலைபோல் நிற்கின்ற
முல்லைப் பெரியாரை
உடைத்தெரிய திட்டமிட்டு
என்னென்ன நாடகத்தை
அரங்கேற்றிக் காட்டினார்
கேரளத்துச் சகோதரர்கள்.
இந்திய திருநாட்டின்
பிள்ளைகள் நாமென்பதை
எப்படி மறந்திடுவீர் சொல்லுங்கள்?

வளம் கொழிக்கும் தேயிலை
ரப்பர் தோட்டங்களில்
வியர்வை சிந்தி உழைக்கின்ற
எங்கள் தோழர்களால்
பெறுகின்றீர் கொள்ளை இலாபம்!

வீணாய்ப் போகும் நீரை
குடிப்பதற்கும் வேளாண்மைக்கும்
கொடுப்பதற்கேன் தயக்கமோ?

உணவுப் பொருள்களை
நாங்கள் அனுப்ப மறுத்தால்
பட்டினி கிடப்பரோ
உம்மக்கள் எல்லாம்.
நாங்கள் தமிழர்கள்
நல்லதை மட்டுமே செய்வோம்
தடையின்றி தந்திடுவோம்
காய்கறிகள் முட்டைகள்
கறிக்கோழி இறைச்சி
பால் பழங்களுடன்
உணவு தானியங்கள்.

இயற்கை அன்னை
வழங்கும் தண்ணீரைத் தர
உமக்கென்ன மனத்தாங்கல்?
உம்மொழியாய்த் தாய்மொழியாய்க்
கொண்டவரை முதல்வராக்கி
பெருமை பட்டோமோ
நீரதுபோல் செய்வீரா?

பிறமொழி பேசுகின்ற
திரையாளர் பட்டாளம்
(தமிழைப் பலவாறு
சிததைத்தாலும் வெகுளாமல்
அவரை யெல்லாம் ஆதரித்து
போற்றி மகிழ்கின்றோம்.
வந்தாரை வாழவைக்கும்
தமிழரின் பண்பாடது)
எத்தனையோ பேரிங்கே
வளம்சிறக்க வாழ்கிறார்
வேறுபாடு எதையேனும்
காட்டிடுவோமா நாங்கள்?
கன்னட மலையாள சகோதரர்களே
நாமெல்லாம் ஓரினம்
நம் மொழிக்குடும்பம் ஒன்று
வடமொழி தமிழ் மொழிக்
கலவை உங்கள் மொழிகள்.
இருந்தாலும் செயற்கையான
வேற்றுமையை அரசியலாக்கி
நீர்தர மறுப்பது நியாயந்தானா?


பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புவது
தமிழர்களின் பண்பாடு
யாதும் யாவரும் கேளிர் எனும்
புறநானூறு த்ந்த பொன்மொயை
பின்பற்றி வாழ்பவர்கள்.

நாங்கள் தமிழர்கள்
வந்தாரை வாழ வைத்து
தலைமைப் பதவியையும்
கொடுத்து பெருமிதம் கொள்பவர்கள்.
நாங்கள் வேண்டுவது
வேளாண்மைக்கும் குடிப்பதற்கும்
தண்ணீரை மட்டுந்தான்
காக்கைகளாய் இருந்து
பகிர்ந்து பயனடைய
கற்றிடுவோம் வாருங்கள்.

எழுதியவர் : இரா. சுவாமிநாதன் (28-Jan-14, 7:34 am)
பார்வை : 447

மேலே