தந்தை மிகவும் நல்லவர்

இறைவன் இருக்கிறான். அவனை யார் வேண்டுமானாலும் உணர முடியும். பல வருடம் கழித்து அல்ல. ஒரு நொடியில். அல்லது அதற்கும் குறைந்த நேரத்த்தில்.

நெடு நாள் கழித்து ஒரு கனவு. கனவு என்ன என்பது நினைவுக்கு வரவில்லை. ஆனால் சாராம்சம் இதவே.
ஒருவன் ஏமாறுகிறான். ஒருவன் ஏமாற்றுகிறான். ஒருவன் நல்லவன். ஒருவன் கேட்டவன், அதாவது நம் பார்வையில். இருவரும் இறங்கிய ஆட்டோ கண் முன்னே. அடுத்த நொடி இருவருமே அந்த ஆட்டோவை பார்த்து கை கூப்பி அழுகின்றனர். அடைந்து விட்ட நிறைவு இருவர் மனத்திலும். ஆட்டோவில் ஒரு வாசகம் எழுதப்பட்டு இருந்தது

“தந்தை மிகவும் நல்லவர்”

இந்த ஒரு வாக்கியத்தில் என்ன இருக்கிறது? ஆனால் எழுந்த உடன் வாழ்வில் ஐந்தாம் முறையாக உணர்ந்தேன். ஒரு நொடி போதும். இதில் சந்தோஷம் என்ன என்றால் அந்த இரண்டு பேர் , கனவு, ஆட்டோ, வாக்கியம் எல்லாமே இதை எழுதிக்கொண்டு இருக்கும் ஒன்று என்று புரிந்தது. சந்தோஷமாக போய் கொண்டிருந்த இவ்வளவு காலத்தில் “தந்தை மிகவும் நல்லவர் “ என்ற வாக்கியம் மட்டும் எதையோ உணர்த்துகிறது . புரியவில்லை. ஆனால் உடல், மனம், முழுதும் சந்தோஷம்.. என் கால் கட்டை விரல் கூட சந்தோஷமாக இருப்பதை, ஏதோ ஒரு முழு இருப்பும் உணர்கிறது, உணர்த்துகிறது..
அதே சந்தோஷத்தில் உங்களுடன் இன்று காலை நான் , இனிய காலை வணக்கங்களுடன்

எழுதியவர் : முரளிதரன் (29-Jan-14, 10:13 am)
சேர்த்தது : முரளிதரன்
பார்வை : 118

மேலே