புது விதி செய்வோம் பாகம் 3

இதைப் படிக்கு முன் புதிய விதி செய்வோம் என்ற கட்டுரையை முதல் பாகத்திலிருந்து படிக்கவும் . தங்களின் கருத்துப் பகிர்வுக்காகவே அவகாசம் அளிக்கப்படுகிறது. மாற்றுக் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன

பாகம் 3

இந்தியா டுடே மற்றும் தி நீல்சன் கம்பெனியும் சேர்ந்து நடத்திய செக்ஸ் சர்வே ரிப்போர்ட் டிசம்பர் 12/2012 அன்று வெளிவந்தது. இவ் வலைத்தளத்தின் புனிதம் குறித்து சுறுக்கமாகவும் ஆபாசப் பதிவுகள் தவிர்த்து பூடகமாகப் பதிவு செய்யப்படுகிறது.
விபரம் சிறு நகரங்கள்(சதவீதத்தில்) பெரு நகரங்கள்(சதவீதத்தில்)

திருமணத்திற்கு முன்பே பாலுறவு கொள்பவர்கள் 13% 18%

துணையுடன் நீலப்படம் பார்ப்பவர்கள் 49% 33%

பதின் மற்றும் முன்பதின் பருவத்தில் உறவு வைத்துக்கொள்பவர்கள் 21% 13%

1 க்கு மேற்பட்ட பெண் துணை கொண்ட ஆண்கள் 31% 38%

பாலியல் கற்பனை
கொண்ட ஆண்கள் 45% 55%

பாலியல் கற்பனை
கொண்ட பெண்கள் 57% 43%

மனைவியை
மாற்றிக்கொள்ளுதல் 6% 10%

பாலியல் தொழிலாளியுடன்
உறவு 17% 27%
மணமாகாத பெண்கள்
டேட்டிங் செய்வது 22% 30%

மேற்கண்ட விளைவுகள் யாவுமே நுகர்வுக் கலாச்சாரப் புணர்வின் எதிர் வினையாகும். புராதன சமுதாய மதிப்பீட்டு எல்லை ஒரு புறமும் , தவிர்க்கமுடியாத விஞ்ஞானப் புரட்சி மற்றும் கணினி மயமாகிவிட்ட வாழ்வியல் சூழல் ஆகிய இவையிரண்டுக்குமிடையே உள்ளீடற்றுப் போன சமுதாய வெளியில் மதில் மேல் பூனையாக இந்திய சமூகம் செய்வதற்று திகைத்துப் போயுள்ளது.

மிசோரம் தலைநகரில் இளைஞர்கள் தனது தோழன் தோழியையே தனது பாலுறவு இணையாக ஏற்றுக்கொள்ளுகிறார்களாம். மத்யப் பிரதேசம் ரத்லாமில் 11% பெண்களே திருமணத்தின் போது கன்னி கழியாதவர்களாக உள்ளார்களாம்.மேற்கு வங்கம் அசன்சோலில் மனைவியை மாற்றுகிற ஆண்கள் அதிகமாம்.

இருக்கட்டுமே .இதிலென்ன தவறு இருக்கிறது ?

இப்படியொரு கேள்வி எழுந்தால் பதில் என்னவாக இருக்கமுடியும் ?

தமிழ் இலக்கியத்தில் களவியல் என்பது கலவி அல்லது திருமணத்திற்கு முற்பட்ட காதலைக் குறிக்கும் வகையாகும். திருமணத்திற்கு முன்னமே தலைவனும் தலைவியும் கலவி கொண்டுள்ளதை அச்சமுதாயம் குற்றமெனக் கொள்ளவில்லையே ! இது குறித்து பின் வரும் பாகங்களில் நாம் காணலாம்.

ரத்லாமைப் பொறுத்தவரை 89% பெண்கள் திருமணத்திற்கு முன்பே கன்னி கழிந்தவர்களாம். முதலிரவில் வெள்ளை விரிப்பில் ரத்தக் கறை தேடிய முட்டாள் சமுதாயம் இப்போது இல்லை என்று தெரிய வருகிறது.

திருமணத்திற்கு முன்பான பாலுறவு
தமிழ் சமூகம் ஆதரித்ததும் அனுமதித்ததும் ஆகும். விரிவாக பின்பு காணலாம், அதில் என்ன தவறு ?அது தவறு என்றால் செம்மொழியாகிய தமிழ் இலக்கியமே தவறென்றாகிவிடாதா ?

இரண்டாவது , துணையுடன் நீலப்படம் பார்ப்பது.
சிலவருடங்கள் முன்பு வரை கூட்டுக் குடும்பம். அம்மா அப்பா உடன்பிறந்தோர் அனைவரும் இருக்க புது மாப்பிள்ளை வரும் போதே மல்லிப் பூ வாங்கி வருவது கூடலுக்கான அழைப்பாக இருந்தது. ஒரே இருட்டு. 10க்கு 10 அடி அறை. மூச்சு சத்தம் கூட தெளிவாகக் கேட்கும். அந்த அறைக்குள்ளே யாரின் கனவு பலிக்கமுடியும். காம சூத்திரம் படங்களுடன் ஏன் எழுதப்பட்டது. அது எழுதப்பட்ட தேசத்தில் ஏன் கலவி தொடர்பான பிற அறிவை வளர்த்துக்கொள்ளக்கூடாது.? துணையுடன் நீலப்படம் பார்த்து அதில் கண்டவாறு அல்லது தான் விரும்பியவாறு ஏன் சுகம் துய்க்கக்கூடாது.என்றும் கேள்வி எழலாமே ?

அடுத்து ,பதின் பருவத்தில் கலவி கொள்வது.

இந்தியாவின் அனைத்து முக்கிய பிரமுகர்களும் 13 வயதுப் பெண்ணைத்தான் திருமணம் செய்துள்ளனர். அப்போது அப்பெண் வயதுக்குக் கூட வந்திருக்க வாய்ப்பில்லை. இப்போதோ 13 வயதில் அவள் எல்லாம் தெரிந்தவளாய் கலவிக்கு தயாராயிருக்கிறாள்.காரணம் உணவுப் பழக்க வழக்கம் பிராய்லர் கோழி தொலைக்காட்சி, அலைபேசியும் அதன் அத்துனை தேவையற்ற சிறப்பம்சங்களும். மற்றும் இணையம் இவையாவும் பெண்ணை சீக்கிரமே மூப்படையச் செய்துவிடுகிறது

நாகரிகத்தின் பெயரால் கிளப்புகள் ,டிஸ்கொதே,பார், என யாரும் யாரையும் எங்கும் எளிதில் தொடலாம் என்ற நிலையிலவர்கள் திரையில் கண்ட மாய பிம்பங்களை தாமாக உருவகித்து மெய் பிம்பங்களாகிக் கொள்கிறார்கள்.

இதற்கு யார் பொறுப்பேற்பது ?

நான்காவது ஒன்றுக்கு மேற்பட்ட பெண் துணை கொண்டவர்கள்.

இவர்கள் ஆதி வரலாற்றில் ஒன்றுக்கு மேற்பட்ட காதலர்களைக் கொண்டிருந்த அன்னை தெய்வத்தை பழி வாங்கும் செயலாகச் செய்தார்களோ என்னவோ ?ஆணாதிக்கம் மேலெழுந்த போது பெண்ணைப் பழி வாங்க ஆண் ஏந்திய முதல் ஆயுதமே பெண் உணவுக்கும் சுகத்திற்கும் தன்னை சார்ந்து இருக்கச் செய்தது தான்.

பத்திரிக்கை செய்திகள் பழகிப் போய் விட்டன. ஆம் டிஸ்போஸல் வகையறா போல் ஒரு பெண்ணை ஐந்து பேர் சீரழித்து தூக்கி வீசிவிட்டனர். இந்த ஜனவரி 2014 ம் வருஷம் ஆட்டோவில் சென்ற ஒரு பெண்ணை மேற்கு வங்கத்தில் லாரியில் வந்த ஐந்து பேர் கற்பழித்து விட்டு தூக்கி வீசி எறிந்து விட்டனர். அதே மாநிலத்தில் ஒரு பஞ்சாயத்து தீர்ப்பு ஒரு இளம் பெண்ணை காதலித்த குற்றத்திற்காக பதினைந்து பேர் கொண்ட கும்பல் கூட்டாக்க் கற்பழிக்கிறது . எங்கே செல்கிறோம் நாம் ?

சமூக மாற்றம் நாம் அனைவரும் எதிர்பார்த்தது தான். சமூக மாற்றம் என்றால் என்ன ? சமுகம் என்பது பண்பாட்டுடன் , கலாச்சாரத்துடன் , நாகரிகத்துடன் இடம் மற்றும் காலத்துடன் பின்னப்பட்ட ஒரு வலை.
சமூகம் மாறினால் மற்றவையும் மாறத்தானே வேண்டும். இது ஞாயமான கேள்வி தானே . நம்மிடையே என்ன பதில் உள்ளது ?

அடுத்த கட்டுரையில் காண்போம்

எழுதியவர் : ராசைக் கவிபாலா (28-Jan-14, 10:12 pm)
சேர்த்தது : ராசைக் கவி பாலா
பார்வை : 237

மேலே