காலம் பதில் சொல்லும் -லிமரிக்

காலம் பதில் சொல்லும் -லிமரிக்

வயிற்றோடு உறவாடும் பசிக்கோலம் -சாக்
கயிற்றோடு விலைபேசும் எதிர்காலம்
விதியெனச் சொல்வதா
சதி எனக் கொள்வதா
மொத்தத்தில் எம் நிலைமை அலங்கோலம்!
**************************************************************
உரிமையில் நாம் கேட்டோம் பாதி
ஒத்துழைக்கவில்லை இனவாத நீதி
ஒன்றாய் திரண்டிருந்தால்
ஒற்றுமையாய் எழுந்திருந்தால்
என்றோ வந்திருக்கும் எமக்கு நல்லசேதி!
******************************************************************
விரோதியை வெல்வது முக்கியம் இல்லை
துரோகியை மெல்வதே நிச்சயம் தொல்லை
துரோகத்தின் நிழலை
துரத்தட்டும் நிஜங்கள்
பின்பே தெரியும் வெற்றியின் எல்லை!

எழுதியவர் : சிவநாதன் (29-Jan-14, 10:40 am)
பார்வை : 1132

மேலே