டாக்டர்

டாக்டர் ஒருவர் வீட்டில் குழாய் ரிப்பேர் ஆகி தண்ணீர் சொட்டிக்கொண்டிருந்தது. இதனையடுத்து அவர் குழாய் ரிப்பேர் செய்பவரை வீட்டிற்கு வரவழைத்தார்.

குழாய் ரிப்பேர் செய்ய வந்த வாலிபர், ஐந்தே நிமிடத்தில் பழுதான குழாயை சரி செய்து விட்டார்.

டாக்டர் அவரிடம் எவ்வளவு ரூபாய் தரவேண்டும் என்று கேட்டதற்கு வாலிபர் 500 ரூபாய் வேண்டும் என்றார்....

இதைக்கேட்டு திகைத்துப் போன டாக்டர் 5 நிமிடத்துக்கு 500 ரூபாயா? டாக்டரான நானே இவ்வளவு பீஸ் கேட்பதில்லை என்றார்.

உடனே வாலிபர், அதற்கென்ன செய்வது? உங்களைப் போல நான் நோயாளியை மீண்டும் வரச்சொல்லி பீஸ் வாங்க முடியாதல்லவா? என்றார்

எழுதியவர் : (29-Jan-14, 2:08 pm)
Tanglish : doctor
பார்வை : 120

சிறந்த நகைச்சுவைகள்

மேலே