களித்தொகை

களித்தொகை (1)
__________________________________________

காதலன் (தலைவன்) காதலி (தலைவி)இருவரும் களிப்பு எய்தும்
காட்சிகளே கலித்தொகை.அந்த காதல் காட்சிகளை நான்
என் கற்பனையில் "களித்தொகையாய்" சஙகநடைச்செய்யுட்
கவிதைகளாய் இங்கு படைத்திருக்கிறேன்.
இப்படிக்கு
சொற்கீரன் எனும்
ருத்ரா இ பரமசிவன்.
___________________________________________________

கறி இவர் வேங்கையின் நுண்தகை வீக்கள்
மென் மழை தூஉய் நனிகளி போழ்தை
மீ மிசை உவப்ப தரும் தண்மையின்
நீழல் வீழ்த்தும் எல் என்னுப கதிரவன்
அதனை அவனும் ஆங்கு காசு மழை அன்ன‌
நிழற் பொடி பெய்த காட்சியில் மலிந்தான்.
அலர் அல்ல இஃது நீ தெளிதி
எனவாங்கு
அவள் வாள்நுதல் வருடி புல்லிய‌
வெள்ளிய அருவி இழிந்தன்ன‌
தழீஇ தந்தான் எல்லே நாண‌
இருள் கவித்து மஞ்சு தரிப்ப காண்.

_______________________________________சொற்கீரன்

எழுதியவர் : ருத்ரா இ பரமசிவன் (20-Oct-24, 11:17 pm)
சேர்த்தது : ருத்ரா
பார்வை : 27

மேலே