எத்துனை காலம்தான் ஏமாற்றுவார்
எத்துனை காலம்தான் ஏமாற்றுவார் கோ வீட்டிலே ...!
--------------------------------------
திரைக்கு கதை எழுதி கதை எழுதி
முளை கழன்டு போன
கருணையில்லாத நிதிமனிதர்
விதியென வீட்டில்
வீல்சேரில் இருக்காமல்
இன்னும் விட்ட குறை தோட்ட குறையாக
வீதி நாடகம் போல் தன்
வீட்டு நாடகத்தை எழுதுகின்றார் !
அரசியல் மேடைக்காக !
அய்யோ பாவம் !
அண்ணனும் தம்பியுமாம்
அவர்களுக்கு வருமாம் அடிக்கடி சண்டை .
ஊர் கூடி தேர் இழுக்கும் காரியம்போல்
இவர்கள் உறவு கூடி இனைத்துவைக்குமாம் !
கலங்காத கண்மனியும்
கண்டிப்பாக நம்பும்படி
கண்ணீர் வழியும் நாடகம்
கண்டிப்பாக அரங்கேறும் !
இப்படிதான் கதை அமையும்
ஔய்ந்துபோன கட்சியை
ஒழிந்துவிடாமல் இருக்க
அது கருணையோடு அரங்கேறும் நாடகம் என
அன்பான அழகர்களுக்கும்
துரை போன்ற முருகர்களுக்கும்
முன்பே தெரியும் !
முற்றுபெறாத கதையாக
தொடரும் என அறியும் !
இப்போது அடுத்த கதை
காந்த மில்லா தலைவன்
கட்சியோடு கூட்டு சேர வேண்டும் !
கதை எழுத தயாரானார்
அண்ணன் தம்பி நடிகர்கள்
சின்னவர் ஹீரோ என்பதால்
மதுரை வீரனென்று
மார்தட்டிய அழகில்லாத கிரி
சண்டையில் தோற்துபோனார் !
கதையெழுதும் தந்தயோ
கவலை போல் நடித்துகொண்டார்
கட்சி கட்டுபாடு
என கதைவிட்டு கழட்டி விட்டார்
வழக்கம் போல்
இந்த படம் நூறைதான்டி
ஊர் தோறும் ஔடும்
அப்போது ஔய்ந்த கட்சியெல்லாம்
ஒன்றாய் வந்து நம்மை சாடும்
என்பது அவரின் நம்பிக்கை !
எத்துனை காலம்தான்
ஏமாற்றுவார் இந்த நாட்டிலே
என்ற பாட்டை கேட்டு வளர்ந்த தமிழ்மக்கள்
எத்துனை காலம்தான்
ஏமாற்றுவார் கோ வீட்டிலே
என கோஷ்மிட துவங்கிவிட்டனர் !