45 மாடிகள்

ரமேஷ், சுரேஷ், கணேஷ் மூவரும் ஒரு 45 மாடி உள்ள கட்டிடத்தில் 45வது மாடியில் உள்ள ஒரு அறையில் தங்கி இருக்கின்றனர். ஒருநாள் அவர்கள் அறைக்குத் திரும்பும் போது...

ரமேஷ் : அய்யோ, லிப்ட் ரிப்பேரா இருக்கே?

சுரேஷ் : சரி, படியில ஏறி போயிடலாம்.

கணேஷ் : ஒவ்வொரு 15 மாடிக்கும் ஒருவர் கதைகள் சொல்லிக் கொண்டே வர வேண்டும்.

ரமேஷ் : நான் காமெடி கதைகள் சொல்றேன்.

சுரேஷ் : நான் ரொமாண்டிக் கதைகள் சொல்றேன்.

கணேஷ் : நான் திகில் கதைகள் சொல்றேன்.

30 மாடிகள் கடந்தன.

ரமேஷ் : கணேஷ், நீதான் இப்போ திகில் கதைகள் சொல்லணும்.

கணேஷ் : நான் சொல்லப் போற கதையைக் கேட்டா நீங்க மயங்கி விழுந்துருவீங்க.

சுரேஷ் : பரவா இல்ல. சும்மா சொல்லு.

கணேஷ் சொன்ன கதை...
....
....
....
....
....
....
....
....
....
....
....
....
....
....
....
....
....
....
....
....
....
....
....
....
....

கணேஷ் : ரூம் சாவிய கார்லயே விட்டுட்டு வந்துட்டோம். அதனால நம்ப 30 மாடி கீழ இறங்கி போய் சாவிய எடுத்திட்டு திரும்பவும் 45 மாடி ஏறி ரூமுக்குப் போகணும்.

இருவரும் நிஜமாகவே மயங்கி விட்டனர்.

எழுதியவர் : முரளிதரன் (29-Jan-14, 6:17 pm)
சேர்த்தது : முரளிதரன்
பார்வை : 134

மேலே