கவிஞன் நான் ஓர் கோமாளி
கால்மேல் கால் போட்டு
கம்பீரமாய் சொடக்குப் போட்டு
கற்பனை ராஜ்ஜியத்தில்
கர்ஜனையாய் ஆட்சி செய்யும்
கவிஞன் நான் ஓர் கோமாளி
பசி வயிற்றை திங்க
பயம் மனதை திங்க
நாளோடும் பொழுதோடும்
விதியோடு போராடும்
கவிஞன் நான் ஓர் கோமாளி
நிஜத்திற்கும் நிழலுக்கும்
இடையில்
நிர்மலமாய் தள்ளாடி
வறுமைக்கு ஒரு கவி புனைந்து,
வயிற்று பசி போக்கி
கவிதை சாறு அருந்தும்
கவிஞன் நான் ஒரு கோமாளி..