காதல் - முப்பரிமாணம்

பூட்டப்பட்ட வீட்டின்
திறக்கபடாத தபால் பெட்டியில் கிடக்கும்
ஒற்றை பூவாய்
பயனற்று கிடக்கிறது
எனக்கு வெளிப்படுத்தாத
உன் காதல் !

வேர்வரை நனைக்காத
மழை என்ன மழை ?
உயிர் தொட்டு கசியாத
காதல் என்ன காதல் ?

கண்களை விற்று சித்திரம் வாங்கும்
கதையிங்கு கண்டேன் நானே!
கண்டவை கதையல்ல உண்மை பெண்ணே
காதலும் அதுபோலத் தானே!

எழுதியவர் : வதூத் (30-Jan-14, 6:27 pm)
பார்வை : 177

மேலே