முயற்சித்தால் முற்றும் உணரலாம்

கூட்டமாய் நடந்தாலும்
குஞ்சுகளாய் இருந்தாலும்
அழகான அணிவகுப்பாய்
பிரியாமல் ஒன்றிடுவோம்
பிஞ்சு மனங்கள் நாங்கள் !
இருவராய் சேர்ந்தாலே மனிதா
இருப்பு கொள்ளாமல் நீயும்தான்
இனவெறி மதவெறி கொள்கிறாய்
இருப்பவன் இல்லாதவன் என்கிறாய்
இறந்தபின் எவரும் ஒன்றுதானே !
ஆசைகளை அடக்கி வாழ்ந்திடு
ஆயுள்வரை இன்பமே பெருகிடும்
அன்புடன் அரவணைக்க பழகிடு
அளவிலா ஆனந்தமே கிட்டிடும்
முயற்சித்தால் முற்றும் உணரலாம் !
பழனி குமார்