வேண்டும் பத்துயிர்கள் - மணியன்

ஓவியங்கள்
நெட்டி முறித்து
நெடுந்தூரம் பயணிக்கும்
என்னவளின் நிழல் காண . . .

பலாச்சுளைகள்
பரிதவிக்கும்
பாவையவள் பல்லிடைப் புக . . .

கவிதைகள்
கற்பகமாய் விரியும்
கன்னியவள் அதரம் வருட. . .

பாலடைகள்
பக்கம் மாறும்
பாதம் கண்டு மனம் நோக . . .

பனிப் பூக்கள்
பல் இளிக்கும்
பஞ்சென செழுமை கண்டு . . .

புறாக் கூட்டம்
புறம் நடக்கும்
பூவையவள் விழி அசைய . . .

ஏக்கமுடன் ஏரெடுக்கும்
எத்தனையோ நித்திலங்கள்
எஞ்சியது சொல்ல இனி
எனக்கு வேணும் பத்துயிர்கள் . . .

எழுதியவர் : மல்லி மணியன் (30-Jan-14, 6:05 pm)
பார்வை : 119

மேலே