விசாலம்

[தற்சமயம் நான்காவது கவிதை தொகுப்பாக "விசாலம்" வந்திருக்கிறது. இது முழுக்க முழுக்க வட்டார மொழி நடையிலேயே அமைந்துள்ளது. அதில் இருந்து ஒரு கவிதை...]
முகவரி
***********
படிச்சவங்க அத்தன சீக்கிரம்
ஏ வூட்ட கண்டுபிடிக்க முடியாது
என்னப் பாக்காமையே
நெறையப்பேரு திரும்பிப்
போயிருப்பாங்க
கடிதாசியோ பொஸ்தகமோ
என்ற வூட்டுக்கு வந்ததில்ல
கைக்கு கெடைக்காம
திரும்பிப் போயிருக்கும்
பள்ளிக்கூட வாடையே அடிக்காத
பால்ய சிநேகிதன் ஒருத்தன்
ஏ வூட்ட சடுதியா கண்டுபுடிச்சது
அசதியம்டான்னு நான் சொன்னதுக்கு
உன்ற பேரவிட “அது”
உன் வூட்டுக்கே கொண்டாந்து
சேத்திட்டுதுன்னு வெகுளியாட்டம்
சிரிச்சான் சிநேகிதன்
ஒரு எளிமையான மொகவரி
சாதியென சொல்லாமல் சொல்லி !
0