அழகான தேசம் வேண்டும்

இனிய சொற்கள் இனிமையாய்
இதழ்களில் மலர வேண்டும் !
நன்மையை பயக்கும் நற்சிந்தனைகள்
அறிவில் வளர்ந்து சாதனைகள் குவிய வேண்டும் !
தனிமை மறைய மகிழ்ச்சி பொங்கும்
மக்கள் துணையாய் நிறைய வேண்டும் !
பயிர்கள் நம் தேசத்தின் உயிர் அணுக்கள்
என்பதை இனிவரும் தலைமுறை உணர வேண்டும் !
இலைகள் மூலிகைகள் மகத்துவம் அறிந்து
அதன் வளர்ச்சிக்கு தேவையான முறைகளை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் !
தூய்மையான எழுத்துக்கள் கொண்ட பாடல்கள்
நாட்டை அழகாய் மாற்றும் சிந்தனைகள் கொண்ட
திரைப்படங்கள் திரைக்கு வர வேண்டும் !
நல்லதை எடுத்து சொல்ல வரும் மக்களுக்கு
செவி கொடுக்கும் மனிதர்கள் உருவாக வேண்டும் !
இயந்திரத்திற்கு மதிப்பு கொடுக்கும் மக்கள் இயந்திரமாய் மாறி கொண்டிருக்கும் நிலை மாறி
அன்பான மக்களை அரவணைக்கும் குணம்
பெருக வேண்டும் !!

எழுதியவர் : கோகுல் (30-Jan-14, 7:45 pm)
சேர்த்தது : K LAKSHMINARAYANAN
பார்வை : 98

மேலே