குமுறு குமுறு
ராமு : குரு பார்த்தால் கோடி நன்மை என்பதெல்லாம் சுத்தப் பொய்.
வேணு : ஏம்பா இப்படி சொல்ற? பெரியவங்க சொன்னதெல்லாம் எப்படிப் பொய்யாகும்?
ராமு : பெரியவங்க சொன்னதெல்லாம் அந்த "குரு" வுக்குத் தெரியலையே?
வேணு : கொஞ்சம் தெளிவா சொல்லுப்பா! என்னாச்சு உனக்கு?
ராமு : நான் விமலாவோட பீச்சுக்குப் போனபோது அவ அண்ணன் குரு பாத்துட்டான். என்னக் கூட்டிட்டுப் போய் குமுறு குமுறுன்னு குமுறிட்டான்.