முதுமையின் கனவு

எங்களின் கடந்த காலங்களில்
வசந்தமும் வந்ததில்லை

வைகறை நினைவாய் பட்ட
வடுக்களும் மறையவில்லை

கடமைகளை முன் வைத்து
அன்று இளமைதான் மூலதனம்

ஏதிர்பார்ப்பு விடியலின் கேள்வி
உழைப்பு ஒன்றே உறங்காமல்

பிள்ளைகள் எதிர் காலம் எண்ணி
ஓடிய கனவு அஸ்திவாரமாய்

கல்வி இல்லா எங்கள் நிலை
கற்று கொண்ட வாழ்க்கை கலை

முடியட்டும் நம்மோடு என்று
முடிவில்லா பயணம் அன்று

உங்கள் எதிர்காலம் மட்டுமே
எங்கள் மனதில் லட்சியம் என்று

வாழ்க்கை பாதியை இழந்து
இன்று தந்த முதுமை கொண்டு

ஏக்கமாய் எங்கள் நிகழ் காலம்
வாட்டமாய் உங்களை நோக்கி

கலங்கிய கண்ணீர் விழிகளில்
சுருங்கிய தேகம் கூன் விழுந்து

தினம் விடியுமா பொழுது ? என்று
விடை தேடும் நிலை இன்று !

முதுமை !
விடை தேடும் விழிகளோடு
உறங்காமல் உன் உறவுக்காக ...........

ஸ்ரீவை.காதர்.

எழுதியவர் : ஸ்ரீவை.காதர் (31-Jan-14, 8:22 pm)
சேர்த்தது : கவிஇறைநேசன்
பார்வை : 93

மேலே