பயணம்

"கல்யாணியும் சாந்தியும் நல்ல தோழிகள். அவர்கள் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் நடுத்தரக் குடும்பத்தை சார்ந்தவர்கள். அலுவல் முடிந்து, எப்பொழுதும் அவர்கள் பேருந்தில் பயணம் செய்துதான் வீட்டுற்கு போவார்கள். அப்படி ஒரு நாள் பயணத்தின் போது" -

"கல்யாணி சாந்தியிடம் கேட்கிறாள் நேற்று செய்தி பார்த்தியாடி, தேர்தல் நெருங்குகிறது ஆகவே சாலை சீரமைப்பு மற்ற எல்லாம் பணிகளும் நம் நாட்டில் விரைவாக செய்து கொண்டு வருகிறார்கள் தெரியுமா?"

"அப்படியா" என்றால் சாந்தி.

"ஆம் நம் நாடு மிகவும் முன்னேறி கொண்டுதான் வருகிறது. ஆனால் அதை தடுக்க நம்மூரிலயே ஆட்கள் இருக்கிறார்களே அதை நினைக்கும் போதுதான் வேதனையாக உள்ளது."

"ஆம் நாலுபேர் நல்லவர்கள் இருந்தால், நாலு பேர் கெட்டவர்களும் இருக்கத் தானே செய்கிறார்கள்."

"நாடு முன்னேறுது முன்னேறுதுன்றோம், நாட்ல விலைவாசி பார்த்தியா?"

"ஆமாண்டி கல்யாணி இப்பொழுது காய்கறி விலை கூட ரொம்ப அதிகமா இருக்கிறது" என்று பேசிக் கொண்டே இருந்த போது அங்கே கண்டக்டர் டிக்கெட் டிக்கெட் என்று சொல்லிக் கொண்டு வந்தார், உடனே கல்யாணி தன்னிடம் இருந்த ஐந்த ரூபாயை கொடுத்து இரண்டு ருபாய் டிக்கெட் இரண்டு கொடுங்கள் என்றாள்.

உடனே அவர் சில்லறை இல்லை என்னிடம் என்றார். இறங்கும் போது வாங்கிகொள்ளுங்கள் என்றார்.

பின் கல்யாணி தன் தோழியிடம் சொல்கிறாள், இந்த கண்டக்டர்களே இப்படித்தான் எப்போ பார்த்தாலும் சில்லறை இல்லை என்று சொல்வதே இவர்களுக்கு வழக்கமாகப் போய் விட்டது. இதெல்லாம் கேட்க யார் இருக்கிறார்கள்.

"ஆமாம் கல்யாணி நீ சொல்வது உண்மைதான் இப்படி பேருந்தில் பயணிக்கும் பயணிகளிடம் எவ்வளோ ரூபா ஏமாற்றி இருப்பார்கள் இவர்கள்" என்றாள் சாந்தி. "பார்க்கலாம் இவர் போகும் போது தருகிறாரா" என்று.

"இதல்லாம் விடக் கொடுமை, நம் நாட்டில் மழை வேறு வந்து என்ன பாடு படுத்தியது மக்களை, பாவம்! மக்கள் அடிமட்டத்தில் இருப்பவர்கள் தான் மிகவும் சிரமபட்டுக் கொண்டு இருக்கிறார்கள்" என்றாள் கல்யாணி.

"ஆம் இப்பொழுது வானம் கூட மக்களை பழி வாங்குகிறது."

"வானமா?"

"ம்... ம்... இயற்கை கூட மனிதர்களை, ஏழைகளைத்தான் பழி வாங்குகிறது. இதனால் விவசாயம் எவ்வளோ பாதிப்பு அடைந்துள்ளது தெரியுமா? நேற்று செய்தியில் இது பற்றித்தான் காட்டிக் கொண்டு இருந்தனர். நாம் சென்னையில் நகர்புறத்தில் வசிப்பதால் நமக்குக் கிராமத்து வாழ்க்கை தெரிவதில்லை. அங்குள்ள மக்களின் உழைப்பால்தான் நமக்கு உண்ண அரிசியும் காய்கறிகளும் கிடைக்கிறது. இந்த மழையால் இப்போது காய்கறிகள் எல்லாம் விலை ஏறி கிடக்கிறது" என்றாள் சாந்தி.

உடனே கல்யாணி "ஆம் சாந்தி ஒரு பக்கம் இப்படி இருந்தாலும், மறுபக்கம், சாப்ட்வேர் மற்றும் இதர தொழில்களில், விஞ்ஞானத்தில் கூட மிகவும் முன்னேறி வருகிறோம். அது அப்படி இருக்க, பாகிஸ்தானில் தாலிபான்கள் மூலம், பெண்கள் பள்ளிகளை தொடர்ந்து எரித்துக் கொண்டு வருகிறார்கள். இது ரொம்ப கஷ்டமாக இருந்தது. ஏன் இப்படி இருக்காங்கன்னு தெரியல. ஏன் இவர்களுக்கு இப்படி ஒரு மனசு இருக்கிறதோ தெரியவில்லை. இதெல்லாம் கடந்தும் இக்காலத்தில் பெண்கள் கல்வி கற்றுக்கொள்வது என்பது மிகவும் அவசியமான ஒன்றுடி."

"ஆமாண்டி இப்போது, விண்வெளி போன "கல்பனா சாவ்லா" எல்லாம் நமக்கு ஓர் முன்னோடிதானே, அந்த தாலிபான் போல நம் கல்வியை நமக்குத் தடுக்க இங்கே அத்தனை கொடூரமானவர்கள் இல்லாதது பெரிய விசயம்டி. நம்மூரில் நம்மை முன்னேற்ற நம் சமுகம் உடன் நிற்கிறது."

"எல்லா இடத்திலும்னு சொல்ல முடியாது. ஒரு சில கிராமங்களில் பெண்கள் பள்ளிக்குச் செல்வதில்லை, ஆனால் இது போன்று பள்ளிக்கு தீவைப்பது, பெண்கள் மீது வன்முறையைத் திணிப்பது என்பது நம் தமிழ்நாட்டில் இல்லை."

பின் அவர்கள் இருக்கும் இடம் வர இருக்க, கண்டக்டரிடம் மீதப் பணத்தை கேட்கப் போனார்கள். உடன் அவரும் கொடுத்து விட்டார்.

"பரவாயில்லைடி. இவர் நல்லவர் போல, அதுதான் கேட்ட உடனே கொடுத்து விட்டர். இல்லையா கல்யாணி"

சாந்தியும் ஆமா. ஆமா. அவர் காதில் கேட்டு விடப் போகுது வா. இறங்கத் தாயார் ஆகலாம் என்றாள். அதற்குள், அலைபேசி அழைக்கும் சப்தம் சாந்தியிடம் இருந்து வர, எடுத்துப் பேசுகையில், அவளுடைய அம்மா வரும் போது நம் தெரு முனையில் இருக்கும் கடையில் பால் வங்கி வா பணம் பிறகு கொடுத்துக்கலாம் என்று சொல்லிவிட்டு தொலைபேசியினை வைத்தாள்.

கல்யாணி என்ன என்றாள். அம்மா அழைத்தாள் "பால் வேணுமாம். போன வாரமெல்லாம் பால் கிடைப்பதே அரிதாய் இருந்தது. பால் வியாபாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக. எல்லாம் இந்த அரசியல் காரணம் தான்."

"ஆம், ஏன் நம் நாட்டில் அரசியல்வாதிகள் இப்படி இருகிறார்கள் என்று தெரியவில்லை. பாவம்டி! அவர்களே கூலிக்கு உழைப்பவர்கள், அவர்களுக்கு ஒரு ரூபாய் விலை ஏற்றிக் கொடுத்தால்தான் என்ன என்று தெரியவில்லை" அதற்குள், பேருந்து நின்றது. அவர்கள் இறங்கும் இடம் வந்தது.

இருவரும் இறங்கி அவரவர் வீட்டிற்குச் சென்றார்கள்.

எப்படியோ, சமூகம் சார்ந்த சிந்தனைகளால், இவர்களின் இன்றைய பயணம் மிகவும் நல்ல பயணமாக அமைந்தது.

எழுதியவர் : கணேஷ் கா (1-Feb-14, 9:59 am)
சேர்த்தது : கா. கணேஷ்
Tanglish : payanam
பார்வை : 281

சிறந்த கவிதைகள்

மேலே