கவிதைக்கு மெருகூட்டும் காதல் விழிகள்

மயிலிறகில் நுனி கத்தரித்து
மாட்டி வைத்தேன் மலர் இதழில் அது
மங்கை உந்தன் கவி இமையோ ?
மயங்குகிறேன் இள மயிலே....!!
மலர்ந்த காதல் இளமையிலே
மாருதமே ஸ்வாசத்திலே...
மதுசுவையை மதியறிய
மறுபடியும் எனை இழக்கையிலே...
இரு இமைக்குள் எனை இருத்தி
இயற்றவேண்டும் நீ கவிதையடி....
இறங்குகின்ற செவ்வானம்
இனிதெனவே விழி நிறம் தீட்ட.....
இரு இமைக்குள் எனை இருத்தி
இயற்றவேண்டும் நீ கவிதையடி....