நாற்பதாண்டுகள்
நாற்பது ஆண்டுகள்
நீண்ட காலம்
என்று கொள்ளாலாம்
வாழ்ந்த நாட்கள்
பலவாகின்
பலவகையாயின்
திரும்பிப் பார்க்கும் பொழுது
தோன்றுவது என்ன
என்று கூற இயலவில்லை .
குழந்தைப் பேறு
அவர்களின் வளர்ப்பு படிப்பு
என்று ஓடிய காலம்
பொறுப்புகள் வரிசையாக இருந்த நேரம்
நான் யார் நீ எப்படி என்று
அறிந்து கொள்ள கூட நேரம் இன்மை
வேகமாக பறந்து திரிந்த வேளை
யாது ஒன்றையும் நினைக்க முடியாத நிலை
ஓடினது வாழ்க்கை
.
இன்று ஒருவரோடு ஒருவர்
என்ற தொடக்கம் வேறுபாடாக
விரியும் போது புரிந்து கொள்ள
பொறுமை இல்லாத போது
வாழ வேண்டிய கட்டாயம்
இடர்கிறது மனது , தடுமாறுகிறது எண்ணம்
பொறுப்புக்கள் குறைந்த பின்
நேசம் பிறக்கிறது வயது ஏறுகிறது
உடல் சோர்வடைய
முடிவு நெருங்குகிறது