சிறாரை சீராக்குவோம் === மணியன்

குப்பையை தேடுது குமிழிகள்
தப்பில் விதைந்த விளைச்சல்கள்
கோவில் உள்ள ஊரிலும்
கோணம் மாறிய கோபுரங்கள். . . .
புத்தகப்பை சுமக்கும் தோள்கள்
பூமித்தாய் முதுகு வருடும் பிஞ்சுகள்
பாடங்கள் படித்திட ஏங்கிடும்
பார்வையில் விழித் தேடல்கள். . .
நடந்து கடந்த சாலைகள்
ரணமாய் கூடுது மனங்களில். .
சிதறிக் கிடக்கும் காகிதங்கள்
சிறாருக்காய் காத்திருக்கும் அவலங்கள். . .
நாளைய பாரதங்கள் இன்று
நடை பாதையில் விரிப்புகளாய். . . .
வல்லரசு ஆகிட சூளுரைப்போர்
வருந்துவரோ இதனைக் கண்டு. . .
நூறு சதவீத கல்வி இன்று
நூலிலையில் ஆடுகிறது. . .
மாறுமோ இந்த அவலம் என்றே
மனிதம் கண்ணீர் சொறிகின்றதே. . . .