ஐடி கம்பெனி

ஐ.டி துறைப் பணியும்
அமெரிக்க வாழ்க்கையும்
இந்திய இளைஞர்களின்
பிரிக்க முடியா கனவு....
ஓட்டமும் நடையுமாய்
வாழ்க்கை..
நிறைவாய் சம்பாதித்து
குறைவாய் சேமித்து
ஓட்டமும் நடையுமாய்
வாழ்க்கை....
சிரிக்க, சிலாகிக்க, சிந்திக்க
நேரமின்றி
எந்திரத்தோடு எந்திரமாய்
யதார்த்தம் தொலைந்த வாழ்க்கை...
வாரக் கடைசியை பப்புகளில் கழித்து
நள்ளிரவு தூக்கம் தொலைத்து....
மீண்டும் ஓட்டமும் நடையுமாய்
வாழ்க்கை...
உறவுகளுடன் நெருக்கம் குறைந்து
சமூக வலைத்தளம் உறவாய் மாறி
ஆன் லைன் பயன்பாட்டில்
அனைத்தும் சுருங்கி
காதலிக்க நேரமின்றி
கணிப்பொறி வழியே கடலை போட்டு
ஆகக் கூடி திருமணம் முடிந்து
ஐந்து நட்சத்திர ஓட்டலில்
பார்டி வைத்து
அவசரமாய் ஹனிமூன் முடித்து மீண்டும்
ஓட்டமும் நடையுமாய்
வாழ்க்கை...
நாடும் வீடும் மறந்து
எம்.என்.சி யின் டார்கெட்டை
விரட்டி, விரட்டி...
ஓய்வு கொள்ளும் நேரம்
வேலையை பறித்திடுமோ
என்று அஞ்சி..அஞ்சி..
உறக்கத்திலும பணியை்
பற்றிக் கொள்ளவே துடிக்கிறது மனது
அஞ்சி, நடுங்கி
ஐம்புலன்கள் அடங்கி
சுதந்திரத்தை தொலைத்து்
அடிமை வேலை செய்தே
ஆயுள் அடங்கியது
பாதியாய் முடங்கியது...
நாற்பதிற்குள்
அனைத்தும் கொடுத்தது ஐ.டி
காசு, பணம், மணி, துட்டு
கவலை...
திரும்பி பார்க்கையில்
எனக்கான வாழ்க்கை ஏதுமில்லை

எழுதியவர் : சித்ரா ராஜ் (4-Feb-14, 9:29 pm)
சேர்த்தது : சித்ராதேவி
பார்வை : 130

மேலே