கரன்சி

கோடீஸ்வரர்களே
உங்களிடம் மட்டுமல்ல
கவிஞர்களாகிய
எங்களிடமும் உள்ளது
நோட்டுக் கட்டு....
உங்கள் நோட்டு கருப்பாக இருக்கலாம்
எங்கள் நோட்டு இனிக்கும் கரும்பாகவே இருக்கும்...
உங்கள் நோட்டு மறைக்கப் பட்டிருக்கும்
எங்கள் நோட்டு விதைக்கப் பட்டிருக்கும்
எங்கள் நோட்டு விவாவத்திற்குரியது
உங்கள் நோட்டு விசாரனைக்குரியது..