மடி கொண்டு வா என் பாரதி

சூச்சம சுற்றத்திலே
சுவாசிக்க கூட துடித்து
சூழ்நிலை வலைப்பின்னலில்
சுழன்றிங்கு துவண்டு
சுதந்திரமாய் திரிந்த என்
சுகச் சிறகுகள் கிழிந்து
ஞாலச் சோலை வளம்பெற
நாளும் விடியல் தேடும்
நானும் என்னுள் உறைந்த நீயும்
இனி எத்தனை நாளோ இப்படியே ?
இருள் சூழும் மாயையும் நம்மை
அன்று தொட்டு இன்றும்
துரத்துகிறது அப்படியே..!
மனத்திண்மை மூட்டிவிட்டாய்
எனிலும் மாயயை விட்டுவிட்டாய்
மகனிங்கு அழைக்கிறேன்
மடி கொடுத்து என் மனமாற்று அய்யா
என் பாரதி அய்யா ..!!

-ராம்

எழுதியவர் : ராம் (4-Feb-14, 6:35 pm)
பார்வை : 95

மேலே