எனக்கு நீ

என் சோகத்தில்
எனக்கு நீ தாய்மடி!
என் பாலைவனத்தில்
எனக்கு நீ புதுமழை!
என் வசந்தத்தில்
எனக்கு நீ தென்றல்!
என் இரவில்
எனக்கு நீ பால்நிலவு!
என் ஆலயத்தில்
எனக்கு நீ மணியோசை!
என் கண்ணீரில்
எனக்கு நீ ஆனந்தம்!
ஆக என் உயிரில்
எனக்கு நீ சரிபாதி!

எழுதியவர் : Akramshaaa (5-Feb-14, 8:23 am)
Tanglish : enakku nee
பார்வை : 106

மேலே