விழா நாளில் நிலா ஒளியில்
விழா நாளில் நிலா ஒளியில்
தனி வழியில் நான்
சென்று கொண்டிருக்க
நேரெதிரில் என்முன்
தேவதை போலொருவள்
தோன்றிய தேனோ
என் வழியில் நான் செல்ல
அவள் வழியில் அவள் செல்ல
என்மனம் ஒரு கணம்
திரும்பிய வேளை
கடந்தென்னைச் சென்றவள்
பின்நோக்கியதும் ஏனோ
என்ன நினைப்பாளோ
என்றேதும் அறியாமல்
பின்தொடர அவளை
தவழ்ந்து வந்த
குளிர்த் தென்றல்
என்னருகில் வந்தது
என்ன அந்த நறுமணம்
சுமந்து அது சென்றதோ
என் நினைவு நானிழக்க
எங்கு அவள் சென்றாளோ