உயர்ந்தவர்கள்

உழைத்த
உழைப்பின் பலன் தெரிகிறது
உன்
தலைதாங்கா இளநீராய்..

தென்னையே,
உன் இளநீரைவிட
உயர்ந்ததாம் சாராயக்கடை சரக்கு..

உயர்ந்துவிட்டான் மனிதன் மேலும்-
இரண்டையும் கலந்து அடிக்கிறானே...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (5-Feb-14, 9:31 am)
பார்வை : 60

மேலே