எது எழுதிய கவிதை

யாருமற்ற சாலையிலே, சூரியனின்
அகச்சிவப்பு தெறிக்கும் மாலையிலே,
புன்னை மரத் தினிடயே
தரை தவழும் நிழல்களுக்கிடயே..
பச்சையம் தொலைத்த பழுப்பு
நிற இலை சருகடியே,
மஞ்சள் நிறத்திலே மரணித்து
கிடந்ததொரு அக்றிணை கவிதையொன்று ..
தூக்கம் தொலைத்த தூக்கனாங்குருவியின்
துயில் மறிக்கும் கனாவொன்று
கனத்த மனதோடு கரையிலே
வீசியதோ அது !!
தும்பெடுத்து, தூசியடைத்து, தானடைத்த
தன்கூடு சுடுகாடாய் மாறியதில்
துயரத் துரத்தலின் தூரம் குறைந்ததென
சிட்டுக்குருவியின் முதற் சிறகிலிருந்து
மொத்தென விழுந்ததுவோ அது !!
மகரந்தசேர்க்கயிலே மலடென்று தானறிந்த
மஞ்சனத்தி மரத்தினுள்ளே மறைந்திருந்த
மரபணு முறிந்ததென்று மரணஓலத்தில்
மறைத்து உதிர்த்ததுவோ அது !!
புறஊதா புதுவடிவாய் புறம்தாக்க
புயலென பறந்தாலும் பிழைக்கமுடியா
பருந்தொன்று பறப்பதை தவிர்த்து
பாதியில் எழுதியதோ அது !!
நான் ஊர கல்லும் தேயும்..
யார் நிமிர்ந்தால் இயற்கை
அழிவு மாறும்..
எறும்பு வொன்று எழுதியது இது !!!