பன் முகத் தேடலிலே

ஒரு முகம் கண்டு
மயங்கினாள்.

மறு முகம் நோக்கி
மருண்டாள் .

எம்முகம் உண்மையோ
எம்முகம் உறுதியோ

முகம் பார்த்து
பழகும் முறையோ

முகம் சொல்லும்
மனதின் உணர்வை

முகம் சொன்னது
இன்று ஒன்றாக.

முகம் சொல்லவில்லை
நாளை எனதாக.

முகமும் பொய் சொல்லும் போல்
பன் முகத் தேடலிலே

எழுதியவர் : மீனா சோமசுந்தரம் (5-Feb-14, 7:15 pm)
பார்வை : 1620

மேலே