பிறந்தது மகா கவி

வாயினுள் புகுந்த ஈ
போய் வந்தது
பல தடவை.

அறியாமல் இருந்தான்
பன் மொழிப் புலவன்
கவனம் சிதறி .

கையிலே பெரிய போத்தல்
கண்ணிலே கிறக்கம்
அறிவு மழுங்கி

வெளியாயின வரிகள்
அணி சேர்ந்து
அமுதமான் கவி.

இலக்கணம் தட்டாமல்
இலக்கியம் பொங்க
பிறந்தது மகா கவி.


.நிலையில்லா நிலமையில்
மதுவின் கையில்
தோன்றியது ஒரு அற்புதம்

எழுதியவர் : மீனா சோமசுந்தரம் (5-Feb-14, 7:37 pm)
பார்வை : 450

மேலே