முருகன்

சேவற் கொடியோனே
சிங்கார வேலவனே
மாதவன் மருமகனே
மகேஸ்வரன் மைந்தனே
ஐங்கரன் தம்பியே
ஆறுமுகத்தோனே
அவ்வைக்கு ஆசானே
அறுபடை வீடுடையோனே
அமரர் தலைவனே
ஆண்டியாய் நின்றவனே
தமிழ்க் கடவுளே
தகப்பன் சாமியே
பிரம்மனுக்கு தண்டனை அளித்தாய்
பரமனுக்கு பொருள் உரைத்தாய்
வள்ளியை மணம் புரிந்தாய்
வானவர் துயர் தீர சூரனை வதம் செய்தாய்
வேலுண்டு வினையில்லை
உன்னை வேண்டிடும் அடியார்க்கு
ஒருபோதும் துயரில்லை வடிவேலா
சரணம் சரணம்....................