கவிதை புரியவில்லை

கவிதை ஒரு புரியாத புதிர் :-

கவிதையை வாசிப்பு என்பது எப்போதும் சோர்வுதரும் காரியமாகவே இருந்துவருகிறது. அதன் புரிபடாத் தன்மையே கவிதையிலிருந்து நம்மை அந்நியமாக்குகிறது. கவிதையுடன் உறவு கொள்வது என்பது எப்போதும் இறுதியில் பிணக்கிலேயே முடிந்துவிடுகிறது. சில கவிதைகள் முதல் வாசிப்பிலேயே புரிந்துவிடும். ஆனால் கவிஞன் சொன்ன அதே பொருளில்தான் நாம் புரிந்துகொண்டோமா என்பதைச் சொல்வது கடினம். சில கவிதைகள் படிக்கப் படிக்கப் புரிவது போல் இருக்கும். ஆனால் படித்து முடித்ததும் அது நம்மைவிட்டு வெகுதூரம் விலகிச் சென்றுவிடும். சில கவிதைகள் என்னதான் இழு இழு என்று இழுத்தாலும் நம்மிடம் வரவே வராது. இப்படியாக கவிதை வாசிப்பின் அனுபவங்கள் என்னைப் போல் பலருக்கும் இருக்கும்.
கவிதை என்பது சிதறிக்கிடக்கும் முத்துக்கள். நாம்தான் கோர்த்து மாலையாக்க வேணடும். நாம் உள்வாங்கும் தன்மைக்கேற்பவே கவிதை தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது. கவிதையின் ஈர்ப்பு அதன் புதிர்த்தன்மைதான். நாம்தான் புதிரை விடுத்துக் கண்டடைய வேண்டும். கவிதையுடன் நம் உறவு சுமுகமாக இருக்க கவிதையை நேசத்துடன் அனுகவேண்டும். அதனுடன் நாம் கொள்ளும் விரோத பாவம் நம்மை அதனிடமிருந்து விலக்கிவிடும். கவிதை தரும் வாசிப்பனுபவம் அந்தரங்கமானது. அதன் புரிந்துகொள்ளும் தன்மை ஆளுக்கு ஆள் வேறுபடுகிறது. கவிதையை வாசித்துவிட்டு நாம் காத்திருக்கவேணடும். நமக்குக் காத்திருக்கத் தெரியுமென்றால் முடியுமென்றால் கவிதைப் பூ மலர்ந்து மணம் வீசத் தயாராய் இருக்கிறது.

கவிஞனாக தன்னை வெளிக்காட்டிக்கொள்ளும் பலரும் இப்படித்தான் மற்றவர்களை மட்டம் தட்டி மகிழ்கிறார்கள்....
உண்மைதானே...

முரளிதரன். ரா

எழுதியவர் : முரளிதரன் (5-Feb-14, 7:30 pm)
சேர்த்தது : முரளிதரன்
பார்வை : 110

மேலே