தேனி

"தெரிந்து கொள்வோம்"

தேன் சுவை:

பொதுவாக பூக்களில் இருக்கும் இனிப்பு சுவை கொண்ட நீரை தேன் என்று நெடுங்காலமாக அனைவரும் வாய்வழியாக கூறி அதே வழக்குச்சொல்லாக மாறிவிட்டது..

இப்படி கூறுவதில் எந்த ஒரு தவறும் இல்லை...

இருந்தாலும் பூக்களில் மகரந்தசோ்க்கை நடை பெறுவதற்காக சூல்முடி பகுதியில் இனிப்புசுவை கொண்ட நீரையும், இதழ்கனில் மணத்தையும் , நிறத்தையும் இனப்பெருக்கத்திற்காக தாவரங்கள் உற்பத்தி செய்கின்றது..

மணம் வீசச்செய்வது தனிக்கதை..

பூக்களில் சுரக்கும் இனிப்புசுவை கொண்ட நீரை தேனாக மாற்றும் மந்திரம் தெரிந்த ஒரே உயிரினம் தேனீ எனும் தேவதை மட்டும்தான்..

பூக்களில் இருந்து எடுக்கப்படும் இனிப்பு நீரானது சத்தில்லா சா்க்கரை நீர்தான்..

இது ஒருசில மணிநேரத்தில் புளித்துப் போய்விடும்..

ஆனால் தேனீ இனிப்புநீரை உறிஞ்சி குடிக்கிறது..

பின் அதன் வயிற்றுக்குள் சுரக்கும் திரவமும்.

குடித்த இனிப்பு நீரும் கலந்துவிடுகிறது..

அதை அதன் கூடுகளில் அது அவசரகாலங்களில் குடிப்பதற்காகவும் , குட்டி குளவிகளுக்காகவும் சேமித்து வைக்கிறது..

அப்போது அதன் வயிற்றுக்குள் உருவான தேன் மீண்டும் அதன் வாய்வழியாக வெளியேற்றி சிறுஅறைகளில் சேமித்து வைக்கப்படுகிறது..

அப்போதும் அது முழுமைஅடையாத தேன்தான்..

ஏனெனில் பூக்களில் எடுத்த இனிப்பில் நீர் அதிகமாக இருப்பதினால்தான் விரைவில் புளித்துப்போய் கெட்டுவிடும்..

அப்போதுதான் சிந்திக்கத் தெரியாத தேனீ மற்றவர்கள் செய்யமுடியாத ஒரு வேலையை செய்கிறது..

அதன் வாய்வழியாக அறைகளில் சேமித்த தேனில் உள்ள நீரை தன்னுடைய இறக்கைகளை வேகமாக அடித்து விசிறி போல் வீசச்செய்து நீரை ஆவியாக்கி இலட்சக்கணக்கான விஞ்ஞானிகள் ஒன்று கூடினாலும் தயாரிக்க முடியாத ஒரு துளி தேனை கெட்டிப்படுத்தி ஆயிரம் வருடங்கள் வரை கெடாமல் இருக்கும் தந்திரத்தை யாரும்சொல்லிக் கொடுக்காமலேயே சின்னஞசிறு தேனீ செய்து முடிக்கிறது..

இந்த தொழில்நுட்பத்தை உலகில் இதுவரை யாரும் கண்டுபிக்கவில்லை..

ஆக நண்பா்ளே பூவில் இருக்கும் வரை அது வெரும் சா்க்கரை தண்ணீா் தேனீயின் வயிற்றுக்குள் போய் வந்து பின்தான் அது தேன்..

எழுதியவர் : முரளிதரன் (6-Feb-14, 8:44 am)
Tanglish : thenay
பார்வை : 132

சிறந்த கட்டுரைகள்

மேலே