தப்பிச்சதே போதுமடா சாமி === மணியன்

டேய் மாப்பிள. . மேனேஜர் வெளியே போயிட்டார். அவர் வருவதற்குள் வீடு வரைக்கும் போய் விட்டு வரப் போகிறேன். நீயும் வேணும்னா போயிட்டு வந்துடு.
வேண்டாம் மச்சான். . . நேற்று நடந்ததே எனக்கு இன்னும் மறக்க முடியல. . கையும் களவுமா அவரிடம் மாட்டப் பார்த்தேன். நல்ல வேளையா தப்பிச்சுட்டேன்.
என்னிடம் சொல்லவே இல்லை. என்ன நடந்தது விபரமா சொல்லு மாப்பிள.
நேற்று இதே நேரம் மேனேஜர்தான் இல்லையே.
வீட்டுக்குப் போயிட்டு வந்துடலாம் என்று போனேன். என் வீட்டு வாசலில் நம்ம மேனஜர் காரு நிக்குது. வாசல் கதவுக்கு வெளியே மேனேஜர் செருப்பு கிடக்குது. வீட்டு உள்ளே நம்ம மேனேஜரும் என் பெண்டாட்டியும் சிரிக்கிற சத்தம் கேட்குது. . .
அய்யய்யோ. . . அப்புறம். . . .
அப்புறமா ?. . சொல்ல மறந்துட்டேனே. நல்ல வேளையாக கதவு உள் பக்கம் பூட்டி இருந்தது.
எடுத்தேன் பாரு ஒரு ஓட்டம். நம்ம ஆபீஸ் வந்துதான் நின்னேன். நல்ல வேளைடா . . .
இல்லைனா. . கையும் களவுமா நான் அவரிடம் நேற்றே மாட்டி இருக்க வேண்டியது.. . . . டேய் மச்சான். . ஏன்டா பல்லை அப்படி கடிக்கிற. . . .
அதான் நான் மாட்டலையே. . . . . .