என்ன கனவு

மனைவி : என்னங்க நேத்து ராத்திரி ஒரு கேட்ட கனவு ...
கணவன் : என்ன கனவு ??

மனைவி : நடுராத்திரி நான் மெதுவா நடந்து போய்க்கிட்டு இருக்கேன் அப்போ யாரோ பின்னாடி வந்து என் தோள்மீது கைவைத்து கூப்பிடுறாங்க திரும்பி பாத்தா ஒரு கருப்பு உருவம் நான் பயந்து போயிட்டேன் அப்புறம் அது என்ன பாத்து வா ன்னு சொல்லிச்சி அவ்வளவு தான் என்ன பாத்து எப்படி அப்படி கேப்பன்னு சொல்லிட்டு பக்கத்தில இருந்த கட்டையால அடிச்சி நொருக்கிட்டேன் அப்புறம் நானும் மயங்கி தூங்கிட்டேன் ...

கணவர் : அப்படியா?

மனைவி : அது இருக்கட்டும் உங்களுக்கு என்னங்க ஆச்சி ...

கணவர் : அது ஒன்னும் இல்லம்மா ராத்திரீல சில ஜென்மங்க தானா நடந்து போகுதுங்க அதுங்கள கூப்பிட்டு போய் திரும்ப தூங்க வைக்கிறதுக்குள்ள அதுங்க நம்மள ஒருவழி பண்ணிடுதுங்க அதுல பட்டதுதான் இந்த அடி வேற ஒன்னும் இல்ல ...

மனைவி : அப்போ அது கனவு இல்லியா ??

கணவன் : கல்யாணம் பண்ணும் போதே உங்க அப்பா சொன்னான் எம் பொண்ணு கனவு கண்டா பலிக்கும்னு..இப்பதானே தெரியுது அவ கனவு காண்றதே பலிக்கிரதுக்குதன்னு ....

எழுதியவர் : சாமுவேல் (6-Feb-14, 7:46 am)
Tanglish : yenna kanavu
பார்வை : 193

மேலே