இயற்பியல் விதி

எதிர் எதிர் துருவங்கள்
ஈர்க்கும் என்பது இயற்பியல் விதி!
கோபமாய் நான்
சாந்தமாய் நீ
படிப்போடு நான்
பண்போடு நீ
தாரளமாய் நான்
சிக்கனமாய் நீ
நகைச்சுவை எனக்கதிகம்
நாச்சுவை உனக்கதிகம்
பிடிவாதம் எனக்கதிகம்
பெருந்தன்மை உனக்கதிகம்
என் தலைக் கணம்
உனக்குத் தெரியும்
உன் இலக்கணம் யாவும்
எனக்கு புரியும்
இயற்பியல் விதி உண்மைதான்
நாம் ஆராய்ந்து பார்த்தோமே...!

எழுதியவர் : சித்ரா ராஜ் (6-Feb-14, 8:39 pm)
Tanglish : iyarbiyal vidhi
பார்வை : 234

மேலே