நிழல் படுக்கையில் இதயம் == மணியன்

நிலவே
உனக்கு இன்று விடுமுறை. .
கீழ்வானம் இறங்கித் தேடுது
என் இரு விழிகள். . . . .
எங்கோ
ஒலிக்குது குயில் ஓசை . .
இங்கே
விரியுது பார் என் மடல்கள். . .
தொட்டது
என்னவோ மலரைத்தான் . . .
சூடினேன்
அதற்கும் உனது பெயரை. . .
வருடியது
என்னைத் தென்றல். . .
திரும்பினேன்
உன் விரல்தான் என்று. . .
உன்
கண்களில் ஏன் இந்த மின்னல் . . .
என் இமை
விரிக்குது பார் குடை. . .
கொஞ்சம்
சொல்லி விட்டு திரும்பு. . .
என் இதயம்
உன் நிழல் படுக்கையில். . . . . . . . . .