தமிழ் என் அம்மா

புத்தி பேதலிக்கும் இத்தருணம்
தாவி அணைகிறேன் தமிழோடு
ஆம் ஈன்றெடுத்த தாயவளென
ஆரத் தழுவி என் அன்னையாக
முத்தமிட்டு அகம் மகிழ்கிறேன்
சிந்தையில் சிறகுகள் சிலிர்க்க
மெய் சிலிர்க்க வைக்கும் தமிழாய் பயணிக்கும் பாதையெங்கும் தமிழ்...!

எழுத்துக்களாய் பவனிவருகிறாள் அமுதூட்டிக் களிப்பேற்றுகிறாள் அன்னையை இழந்து அநாதையாகி சுருண்டு விழவிருந்த என்னை நிமிர்த்தி மடிதாங்கித் தாலாட்டிய தமிழ் அல்லவோ...!
இனி என் தாய் தமிழ் இருக்கத் தனிமையில்லை காலத்தின் கட்டாயத்தில் என்னை பிரிந்து சென்ற என் அன்னை இன்று
அழகு மிளிரும் தமிழாய் என்னிடமே வந்து தாயெனவொன்றிக் கலந்தாள்
மூச்சிருக்கும் வரை உடனிருப்பாள்

எழுதியவர் : Akramshaaa (6-Feb-14, 9:04 pm)
Tanglish : thamizh en amma
பார்வை : 74

மேலே