காதல் சிலுவை

இதயங்கள் இரண்டும் ஒன்றென
கலந்த பின்னே
சிந்தனை மட்டும்
இரெண்டெனக் கிடக்குது

விழிகள் நான்கும்
இரெண்டென்றான பின்னே
ஒரு கண்ணில் மட்டும் – ஏனோ?
நீர் கசியுது!

நாடித்துடிப்பை
சற்று நிறுத்திப் பார்த்தேன்- அது
உன் பேர் சொல்லி கதறியதே

காதல் சின்னம்
செதுக்குவதாக சொல்லி
என் இதயத்தின் மேல்
ஏன்?
உழி கொண்டு செதுக்குகிறாய்

தேம்பி தேம்பி
அழுகின்றேன்
தேற்றிட காதலி வரவில்லை

இந்த கண்ணீருக்கு
காரணம் யாரோ
தெரியவில்லை

கண்ணீரில் முகத்தை
மூடிக்கொண்டு
என் வாழ்வில் விடியலை தேடுகின்றேன்

காதலை சுமக்க
சொன்னவள்
சிலுவையை சுமத்திவிட்டால்

கத்திருக்க சொன்னவள்
கண்டுக்காமல் சென்று வீட்டால்

பென்னே!
உன்னை காதலித்து
காத்துக்கிடந்தது போதும்
சிரிப்பதற்கு கூட உரிமை இல்லை
எதற்கடா காதல்


ப்ரியன்

எழுதியவர் : அசோக் பிரியன் (6-Feb-14, 10:57 pm)
Tanglish : kaadhal siluvai
பார்வை : 140

மேலே