என்னடா வித்தியாசம் ----- மணியன்

டேய் மணி. . . .
நீ சொல்லுடா . . .
காதல் கல்யாணத்துக்கும்
நிச்சயிக்கப் பட்ட கல்யாணத்துக்கும்
என்னடா வித்தியாசம் . . . ?.

அதுவா சார். . . ?.
உங்க பொண்ணும் நானும்
எங்க ரெண்டு பேருக்கு மட்டும்
தெரிந்து பண்ணுவது - காதல் கல்யாணம். . .
அதையே போனால் போகுதுன்னு
ஒரு நாலு பேருக்கு மட்டும் தெரிந்து
பண்ணினால் நிச்சயிக்கப் பட்ட கல்யாணம். . .

டேய் . . . அதுக்கு ஏன்டா என் மகளை
இழுக்குற ? .. . . .

நீங்கதானே சார் எது சொன்னாலும்
நல்லா புரியுற மாதிரி சொல்லுடா என்று
அடிக்கடி சொல்லுவீங்க. . இப்பவும்
உங்களுக்குப் புரியலீங்களா சார் ,,,,?,

எழுதியவர் : மல்லி மணியன் (6-Feb-14, 11:36 pm)
பார்வை : 171

சிறந்த நகைச்சுவைகள்

மேலே