மெட்டுப் பாடல்

இது ஒரு சினிமாப் பாட்டின் மெட்டில் எழுதியது

கண்டுபிடியுங்கள் எந்தப் பாட்டென்று
கருத்து சொல்லுங்கள் இந்தப் பாட்டு எப்படியென்று.


பல்லவி

பாடினேன்.......... பாடினேன் பாட்டு- உன்
பார்வையின் சம்மதம் கேட்டு
பாடலின் ஓர் வரி கேட்டு-உன்
காதலை என்னிடம் காட்டு

ராத்திரிக் ..............காற்றில் உன்னைப் பாடினேன்
சன்னலில்....... மீண்டும் மீண்டும் தேடினேன்
பௌர்ணமிப் பாவை....யே
பாவம் நான் இல்லை...யோ ?

பல்லவி

இரவில் மட்டும் வெண்மதியே
இரவல் வேண்டும் நிம்மதியே
நடமாடும் சன்னதியே
இதுதானோ என் விதியே

அன்பே சொல் நீதான் என்ன
உயிருள்ள சதைத் தொகுப்பா ?
எனக்குள்ளெ எலும்புக்குள்ளும்
உனக்காக உயிர் துடிப்பா ?

காதல் தீபம் காற்றில் ஆட
கண்ணே நீயேன் முகம் மறைத்தாய்

பல்லவி

அள்ளி வைத்த கூந்தலிலே
கிள்ளி வைத்தாய் இதயத்தையே
சொல்லி வைத்த கதைகளை[ப் போல்
தள்ளி நின்று ரசிக்கிறியே

அன்பே உன் புன்னகைத் தீயில்
அன்றாடம் கருகுது நெஞ்சம்
ஆனாலுன் வாய் மொழிக்காக
அதிலேயும் உள்ளது கொஞ்சம்

கொலுசு கூட சோகம் சொல்லும்
மனசு ஏனோ பாலைவனம் ?

பல்லவி

காலில் இல்லை கண்மணியே
நெஞ்சில் தைத்த முள் நீயே
முள் தைத்த வலி கூட
உன் முகம் கண்டு மறையுதடி

எழுதியவர் : ராசைக் கவிபாலா (7-Feb-14, 4:26 pm)
பார்வை : 103

மேலே