ஐயமில்லை ஐவரும் ஐந்தருவியே
ஐம்பொன் சிலைகளின் அணிவகுப்பா
ஐந்துவித கலைநயமுள்ள சிற்பங்களா
ஐவரும் அழகுகுறிப்பின் அடையாளங்களா
ஐந்தே அரங்குகள் உள்ள கண்காட்சியா
ஐவர் அலங்கரிக்கும் அலங்காரமேடையா
ஐவரும் இணைந்திட்ட வரவேற்பு வளைவா
ஐம்பெரும் காப்பியங்களின் வடிவழகா
ஐ நா சபையின் மழலையர் பிரதிநிதிகளா
ஐந்து மலர்கள் கோர்த்த வண்ணமிகு மாலையா
ஐயமில்லை ஐவரும் ஐந்தருவியே !
பழனி குமார்