வாடா மலர்

நேற்று மலர்ந்த ரோஜாக்கள்

மெச்சிக்கொண்டன

அதன் மென்மையைப் பற்றி…

பாவம் மறந்து விட்டனவோ

என்னவோ உனது உதடுகளை !

காலையில் மலர்ந்ததற்கே நிமிர்ந்து

நிற்கின்றன கர்வத்துடன்…

பாவம் நீ என்றும் வாடா மலர்

என்று அறியாமல் !

பறித்தது கூடத் தெரியாமல்

எள்ளி நகையாடிக் கொண்டன…

அதனைப் பறித்தது

நீ என்பதால் !…

எழுதியவர் : பிரகாஷ் ராமசாமி (7-Feb-14, 4:40 pm)
Tanglish : vadaa malar
பார்வை : 94

மேலே