கடவுளே கடவுளே

அபிஷேகம் ஆயிற்று
அலங்காரத்துடன்
அருள்பாலித்தார் கடவுள்
திரைக்குப் பின்னே ..!

பூசாரி காத்திருந்தான்; தான்
எதிர்பார்க்கும் கூட்டத்தையும்
எதிர்நோக்கும் தலைவனையும் ..!

ஐயர் வரும்வரை அமாவாசை
காத்திருக்குமா ஐயா ..!?

காத்திருப்பான்
நம்மைப் படைத்தவன்
நாம்படைத்தவன் தானே ...!

(கடவுளே ..! கிட உள்ளே ?)

எழுதியவர் : நிலா நேசி (7-Feb-14, 4:55 pm)
பார்வை : 100

மேலே