முயற்சி
முற்றுவிட்ட ஒரு
புள்ளியில் இருந்து மீண்டும்
புள்ளி வைத்து ஆரம்பிக்கிறேன்....
கனவுகளும்..
கற்பனைகளும்...
கட்டுக்கடங்கா....
யாதர்த்தத்தின் உண்மைகளை
யாவருக்கும் சொல்லிட மனம்
துடித்தாலும்....
துடித்து விட்ட நொடிப்
பொழுதின் கணம்....
மறுதலிக்கிறது....
ஒற்றை புள்ளியில் இருந்து..
ஒன்று ஒன்றாய் புள்ளியிட
ஆரம்பிகிறேன்................